×

திருக்கச்சூரில் சாலையில் விழுந்த வழிகாட்டி பலகை: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், திருக்கச்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2ம் தேதி பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்நிலையில், சிங்கபெருமாள்கோவில் – ஒரகடம் வழியாக ஸ்ரீபெருமந்தூர் செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த துருபிடித்திருந்த வழிகாட்டி பெயர் பலகை கீழே விழுந்துள்ளது. இதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இன்னும் அகற்றாமல் உள்ளனர்.
சிங்கபெருமாள்கோவில் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 24 மணி நேரம் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஏராளமாக இவ்வழியாக செல்லும். கீழே விழுந்து கிடக்கும் வழிகாட்டி பெயர் பலகையை அகற்றாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்க்குள்ளாகியுள்ளனர்.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி சாலையில் விழுந்து கிடக்கும் இரும்பு வழிகாட்டி பலகையை பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருக்கச்சூரில் சாலையில் விழுந்த வழிகாட்டி பலகை: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirukkachur ,Chengalpattu ,Chengalpattu district ,Singaperumal temple ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...