×

முன்னாள் படைவீரர்கள் மறு வேலைவாய்ப்பு பெற்றிட திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் முன்னாள் படைவீரர்கள் மறு வேலை வாய்ப்பு பெறும் பொருட்டு அவர்களுக்கு பொருத்தமான பலவிதமான திறன் பயற்சியினை ரூ.7 கோடி செலவில் 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு அளிக்கப் போவதாக தெரிவித்தார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மறு வேலை வாய்ப்பு பெற்றிட ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் திறன்பயிற்சியினை உடனடியாக, திருவள்ளூர் ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாத்தில் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலத்தின் தொலைபேசி எண்ணான 044-29595311 ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்த விவரங்களை முன்னாள் படைவீரர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தில் தெரிவித்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது exweltlr@tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவோ அனுப்பி வைத்தும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்கள் மறு வேலைவாய்ப்பு பெற்றிட திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Alby John Varghese ,Chief Minister ,M.K.Stalin ,Independence Day ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...