×

இரட்டை கொலையில் மேலும் 3 பேர் கைது

புழல்: செங்குன்றம் அருகே, இரட்டை கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். செங்குன்றம் அருகே கண்ணம்பாளையம் கிராமத்தில், கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில், கடந்த 1ம் தேதி நள்ளிரவு பெருங்காவூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், விஜய் ஆகிய இருவரையும் ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. இவ்வழக்கு தொடர்பாக, செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து, ஏற்கெனவே 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, கண்ணம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிஷோர்(18), ஹரிஷ்(19), பாலசுப்பிரமணி(18) ஆகிய 3 பேரை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், தனிப்படை போலீசாருக்கு ஆவடி மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

The post இரட்டை கொலையில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Senggunram ,Kannampalayam ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பகுதிகளில் வெள்ளத்தில்...