×

சோதனையில் பிடித்த மதுபாட்டிலை பதுக்கிய 3 ஏட்டுக்கள் சஸ்பெண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சில சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்படும் மதுபாட்டில்களை போலீசார் பதுக்கி எடுத்து செல்வதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதுமாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து எஸ்.பிக்கு புகார் வரவே, சோதனைச்சாவடியில் பணியாற்றும் போலீசார் கண்காணிக்கப்பட்டு வந்தனர். கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் பணியிலிருந்த ஏட்டுக்கள் வினோத், முரளி, முத்தரசன் உள்ளிட்டவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனையில் சிக்கிய மதுபாட்டில்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பதுக்கி தன்வசம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. சஷாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.

The post சோதனையில் பிடித்த மதுபாட்டிலை பதுக்கிய 3 ஏட்டுக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கைம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வி.ஏ.ஓ. கைது