×

அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு எதிரொலி; உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜினாமா

கீவ்: உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிகோ ஒரு வாரத்தில் மாற்றப்படுவார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உடனடியாக தனது அமைச்சர் பதவியை ஒலேக்சி ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. சர்வதேச நாடுகள் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இரு நாடுகளும் தொடர்ந்து போரை முன்னெடுத்து சென்று வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சராக இரு்ககும் ஒலேக்சி ரெஸ்னிகோவை வேறு துறைக்கு மாற்றுவதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில்,‘‘550 நாட்களுக்கும் அதிகமாக போரை சந்தித்த நிலையில் புதிய தலைமை தேவை. பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கும், ராணுவத்துக்கும் புதிய அணுகுமுறைகள் மற்றும் பல்வேறு வகையான தொடர்புகள் தேவையாகும். எனவே பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலேக்சிக்கு மாற்றாக ஒரு வாரத்தில் புதிய அமைச்சராக ரஸ்டம் உமேராவ் நியமிக்கப்பட இருக்கிறார்.

உக்ரைன் நாடாளுமன்றத்துக்கு இந்த நபர் நன்கு அறிந்தவர். இவரை குறித்த கூடுதல் அறிமுகம் தேவையில்லை. இதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு துறை அமைச்சர் மாற்றப்படவுள்ளது குறித்த அதிபரின் அறிவிப்பை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்சி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

The post அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு எதிரொலி; உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : President ,Zelensky ,Defense Minister of Ukraine ,Kiev ,Defense Minister ,Oleksiy Reznyko ,Ukraine ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்