×

ரூ.28 லட்சம் கையாடல் ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). தொண்டப்பாடி ஊராட்சி செயலாளர். முன்னதாக தொண்டமாந்துறை ஊராட்சி செயலாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் மீது, தொண்டமாந்துறை, தொண்டப்பாடி ஊராட்சி பொதுநிதி மற்றும் திட்டப்பணிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. அந்த ஊராட்சிகளின் வங்கி வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ.28 லட்சத்தை கலியமூர்த்தி கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாராயணன் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரும்பாவூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.28 லட்சம் கையாடல் ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Perambalur ,Kaliamurthy ,Thondamanthurai ,Veppanthatta taluk ,Perambalur district ,Thondapadi ,Dinakaran ,
× RELATED ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒரு வாரத்தில்...