ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீ மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே தாசுகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, முதல் கால யாகசாலை பூஜையும், 2ம் நாள் விக்னேஷ்வரபூஜை, சோம கும்பபூஜை, 2ம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து 3ம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது.
3ம் நாளான நேற்று முன்தினம் 4ம் கால யாகசாலை பூஜையும், பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மகேஸ்வர பூஜைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு ஊத்துக்கோட்டை, தாசுகுப்பம், புதுகுப்பம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
The post ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீ மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.
