×

குடமுழுக்கு திருப்பணிகளுக்கான முதற்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களுக்கு பாலாலயம்: அமைச்சர், எம்எல்ஏக்கள், பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 2009 ஏப். 8ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது, மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குடமுழுக்கு திருப்பணிகளின் முதற்கட்டமாக கோயிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் 7 நிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் நேற்று காலை பாலாலயம் நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை என குடமுழுக்கு திருப்பணிக்கான துவக்கமாக பாலாலய பூஜை நடைபெற்று, ஊர்வலமாக உற்சவர் சன்னதி கொண்டு வரப்பட்டு ஓதுவாமூர்த்திகள் தமிழ் திருமுறைகள் பாட, வேதவிற்பன்னர்கள் வேத பாராயணம் செய்திட தீபாராதனைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் ருக்மணி பழனிவேல்ராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை, கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post குடமுழுக்கு திருப்பணிகளுக்கான முதற்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களுக்கு பாலாலயம்: அமைச்சர், எம்எல்ஏக்கள், பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman Temple ,Gopurams ,Kudamuzku ,Tirupani ,Madurai ,Madurai Meenakshiyamman Temple ,Meenakshi Amman ,temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...