×

பழவேற்காட்டில் மசூதி அருகே பாம்புகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மசூதி அருகே பாம்புகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கரையார் தெருவில் பழங்காலத்து மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியை சுற்றி 16 கிராமங்கள் உள்ளன. இந்த மசூதிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவு இங்கு வந்து தங்கி வழிபாடு செய்து விட்டு செல்வது வழக்கம். மசூதி நிர்வாகம் சார்பில் இங்கு வருவோருக்கு, தங்குவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மசூதி சுற்றுச்சுவர் அருகே உள்ள கல்களின் இடுக்கில் 3பாம்புகள் 5 குட்டிகளை ஈன்று, நடமாடிக் கொண்டிருக்கிறது. இதனை மசூதிக்கு வருவோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டு அச்சம் கொண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், மூன்று நாட்களாகியும் வனத்துறையினர் அந்த இடத்திற்கு வந்து சோதனை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மசூதியில் தங்கி வழிபாடு செய்பவர்கள் கூறுகையில், மசூதி சுற்றுச்சுவர் அருகே உள்ள கல்களின் இடுக்கில் 3 பாம்புகள் 5 குட்டிகளை ஈன்று, நடமாடிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த பாம்பு யாரையாவது கடித்து விபரீதம் ஏற்படுத்துவதற்குள் அதனை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

குழந்தைகளோடு குடும்பமாக மசூதியில் வழிப்பாட்டிறக்காக தங்குவதால் இரவு நேரத்தில் பாம்புகள் அப்பகுதிக்கு வந்து விபரீதம் ஏதேனும் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. மேலும், இந்த மசூதியை சுற்றி 16 கிராமங்கள் உள்ளன. அந்த குடும்பங்களும் தற்போது அச்சத்தில் மூழ்கி உள்ளன. எனவே, இந்த பாம்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உயிர்கள், பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது இருப்பதால் வனச்சரகம் மற்றும் பறவைகள் சரணாலயம் துறை அலுவலர்கள் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு இந்த பாம்புகளை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பழவேற்காட்டில் மசூதி அருகே பாம்புகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Palavekkad ,Palavekkat, Tiruvallur district ,Tiruvallur District ,Kariyar ,Palavekadu ,
× RELATED வங்கக்கடல் புயல் எச்சரிக்கை; 5000க்கும்...