×

திருவள்ளூர் ஜெயா நகரில் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலய கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர், ஜெயா நகர், குமரவேல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை மகா கணபதி ஹோமம், லட்சுமி ஓமத்துடன் தொடங்கியது. மேலும் வாஸ்து பூஜை, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் ஸ்ரீ மகா வல்லப கணபதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பிறகு ஸ்ரீ மகா வல்லப கணபதிக்கு தீபாராதனை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து புனித நீரை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி பொறியாளர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், நகராட்சி கவுன்சிலர்கள் கந்தசாமி, தாமஸ் என்கிற ராஜ்குமார், பத்மாவதி ஸ்ரீதர், அய்யூப் அலி, அருணா ஜெய்கிருஷ்ணா, ஹேமலதா நரேஷ், தனலட்சுமி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post திருவள்ளூர் ஜெயா நகரில் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலய கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Sri Maha Vallabha Ganapati Temple Kumbabhishek ,Tiruvallur Jaya Nagar ,Tiruvallur ,Sri Maha Vallabha Ganapati Temple ,Thiruvallur, Jaya Nagar ,Kumaravel Nagar ,Kumbabhishekam ,
× RELATED தடுப்பணை, குட்டையில் மூழ்கி வாலிபர்...