×

4 ஆண்டுகளாக காஸ் விலை குறைக்காதது ஏன்? துரை வைகோ கேள்வி

கடலூர்: நான்கு ஆண்டுகளாக காஸ் விலையை குறைக்காதது ஏன்? என்று துரை வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். கடலூரில் மதிமுக மண்டல செயல்வீர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசுகையில், ‘தொண்டர் பலம், மக்கள் பலம் இருந்தால் தான் கட்சிக்கு மதிப்பு. எனக்கு அரசியல் ஆசையும், பதவி ஆசையும் இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகத்துக்கு எதிரானது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் விலை குறைக்காதது ஏன்?. காய்கறி, துணி உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். ஒன்றிய அரசின் நிலைப்பாட்டில் தேர்தலுக்கு முன் காஸ் விலை குறைக்கப்படுவது மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் அமைந்துள்ளது. அடித்தட்டு மக்கள், விவசாயிகளின் நலன்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதும், அவர்கள் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. இந்திய அரசில் முதல்முறையாக ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும்’ என்றார்.

The post 4 ஆண்டுகளாக காஸ் விலை குறைக்காதது ஏன்? துரை வைகோ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Cuddalore ,Madhyamik ,
× RELATED சுரங்கத்துறை மின் ஏலத்திற்கு தடை...