- அக்னி வீரபூத்ரன்
- சிவகாசி
- எடங்கல் முத்துமாரியம்மன்
- காலனி
- விருதுநகர் மாவட்டம்
- சிவகாசி எடிங்கல்
- முத்துமாரியம்மன்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் அக்னி வீரபுத்திரன். இவரது மனைவி மருதவள்ளி (21). இவர்களது மகள் யாழினி (6). குடும்பத்தகராறு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அக்னி வீரபுத்திரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. மருதவள்ளி அப்பகுதியில் உள்ள ஊறுகாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவர் பிரிந்ததால் மன விரக்தியில் இருந்தவர், நேற்று பள்ளிக்குச் சென்று மகளை மதியம் வீட்டிற்கு அழைத்து வந்தார். தொடர்ந்து மகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் இருவரும் கருகி உயிரிழந்தனர். அலறல் கேட்டு காப்பாற்ற முயன்ற உறவினர் ஈஸ்வரன் காயமடைந்தார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கணவர் பிரிந்ததால் குழந்தையுடன் தாய் தற்கொலை appeared first on Dinakaran.