×

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஈரான்: 2017ல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு இதே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2017ல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோபம் அதிகாரிகள் மீது திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 

The post ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Damkhan ,of ,Iran ,Azad Shahr ,northern part of ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...