×

மகாவல்லப கணபதி கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஜெயா நகர், குமரவேல் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீமகா வல்லப கணபதி கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. வாஸ்து பூஜை, முதல் காலயாக பூஜை, 2ம் கால யாக பூஜை, 3ம் கால யாக பூஜை, 4ம் காலயாக பூஜை நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் ஸ்ரீமகா வல்லப கணபதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீமகா வல்லப கணபதிக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து புனித நீரை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post மகாவல்லப கணபதி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Mahawallapa ,Ganapati ,Temple ,Kumbaphishekam ,Tiruvallur ,Srimaga Vallabha Ganapathi Temple ,Thiruvallur ,Jaya Nagar ,Kumaravel Nagar ,Mahawallapa Ganapati Temple ,
× RELATED சுந்தரேஷ்வர சுவாமி கோயில்...