×

நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை முதல் கிழக்கு கடற்கரை சாலை கடலூர் கிராமம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருவதால் நெடுஞ்சாலையின் இரண்டு புறமும் இருந்த நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரம், அரசமரம், வேப்பமரம், பனைமரம், புளியமரங்கள் ஆகியவற்றை நெடுஞ்சாலை துறையினர் அடியோடு வெட்டி அகற்றி வருகின்றனர். இது பார்த்து மக்கள் வெதும்புகின்றனர். இந்த நிலையில், மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மரங்களை வெட்டாமல் அவற்றை வேரோடு பிடுங்கி பள்ளி கூடம், குளம், பூங்காக்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் நடவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத்தாயகம் சார்பில், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பால் ஊற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கீரல் வாடி கிராமத்தில் நடை
பெற்றது. பசுமை தாயகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் நா.சுரேஷ் தலைமை வகித்தார். இதில் பசுமை தாயகம் மாநிலத் துணைச் செயலாளர் ஐ.நா.கண்ணன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக செயலாளர் கி.குமரவேல், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகனரங்கம், எடையாளம் அன்பு, மாணவரணி மாவட்ட செயலாளர்வினோத்குமார், கிளியாநகர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Chengalpattu District ,Maduranthakam ,East Coast Road ,Cuddalore ,Mudugarai ,Dinakaran ,
× RELATED தேவத்தூர் ஊராட்சியில் புதிய...