×

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை: தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35 சதவீதம் கூடுதலாக வைத்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளது, முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் வழிமுறைகளைத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பின்பற்ற உள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35% கூடுதலாக உள்ளது; நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளது. ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்”

மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. கடந்த 2014-ல் பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். இது சாத்தியம் அல்ல என்று அக்கருத்து புறந்தள்ளப்பட்டு வந்தது. எனினும் இதை சாத்தியமாக்க பிரதமர் மோடியின் அரசு தற்போது தயாராகி வருகிறது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் வரும் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும் இதை ஒரே சமயத்தில் அமலாக்குவது சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை: தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Tamil Nadu Election Commission ,Chennai ,
× RELATED 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...