
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- தூத்துக்குடி பயணம்: ஆய்வுக் கூட்டம்
- சென்னை
- புதுக்கோட்டை
- தூத்துக்குடி மாவட்டம்
- திமுக
- துட்டிகோர்ன் வடக்கு
- தென் மாவட்ட
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று (4ம் தேதி) மாலை தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார். அதற்காக பிற்பகல் 3.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி செல்கிறார். விமானநிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு கொடி கம்பம் புதுக்கோட்டையில் உள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளரான தூத்துக்குடி ஜோயல் வீட்டின் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியினை ஏற்றிவைக்கிறார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, திமுக தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மாநில திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின்பு தூத்துக்குடிக்கு முதன் முதலாக வருகிறார் என்பதனால், அவரை வரவேற்க திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணம்: ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.