×

டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது: அமெரிக்க அதிபர் கருத்து

வாஷிங்டன்: ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். ெடல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் வருகை தரவுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற செய்தியறிந்து ஏமாற்றமடைந்துள்ளேன்.

ஜி-20 மாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். எனது இந்தியா பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாமுக்கும் செல்கிறேன்’ என்றார். ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காத நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லஃபரோவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டின் பிரதமர் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

The post டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது: அமெரிக்க அதிபர் கருத்து appeared first on Dinakaran.

Tags : President ,Delhi G-20 Summit ,US ,Washington ,US President ,Joe Biden ,Xi Jinping ,G-20 summit ,
× RELATED ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க...