×

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா..? மக்கள் நீதி மய்யம் கட்சியினருடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியா என பெயரிடப்பட்டுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரு என கூட்டங்கள் கூட்டப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு மாநில செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.

The post நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா..? மக்கள் நீதி மய்யம் கட்சியினருடன் கமல்ஹாசன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,People's Justice Maiyam Party ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...