×

நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி அவர்களின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் :அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி அவர்களின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றியுள்ளார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. செங்கோட்டை திருராமமந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 1982 முதல் 1986 வரை இளநிலை பொறியியல் படிப்பை முடித்தார். தொடர்ந்து பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்து, பின்னர் இஸ்ரோவில் சேர்ந்தார். அரசு பள்ளியில் படித்த பெண் உலகமே உற்று நோக்கும் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக பணியாற்றி இருப்பது பலருக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம் என்பது தொடர்ந்து நிரூபணமாகி கொண்டே வருகின்றது!செங்கோட்டையில் உள்ள இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி அவர்கள் #AdityaL1 திட்டத்தின் இயக்குநராக சாதனை படைத்துள்ளார்.தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டி நமது மாணவர்களுக்கு வழிகாட்டும் நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி அவர்களின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்,”என்று பதிவிட்டுள்ளார்.

The post நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி அவர்களின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் :அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Nigar Shaji ,Minister Anbil Mahesh ,Chennai ,Minister ,Anbil ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...