×

பொறியியல் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் 50,000 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்

சென்னை: பி.இ., பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் 50,000 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு என்பது மொத்தம் மூன்று சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதில் மூன்றாவது சுற்றும் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் முடிவுகளில் மாணவர் சேர்க்கை பணிகளை கவனிக்ககூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுயிருக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட ஒற்றை சாலர கலந்தாய்வில் இருக்கக்கூடிய 1,70,000 இடங்களில் 53,000 இடங்கள் இறுதியாக காலியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் சராசரியாக 50,000 இடங்கள் முதல் 75,000 இடங்கள் வரை காலியாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் இந்தாண்டு 53,000 இடங்கள் காலியாக உள்ளது. மேலும் பெரும்பாலான கல்லூரிகளில் 50% மட்டுமே நிரம்பி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 11 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் அதன் முன்னனி கல்லூரிகளில் கிட்டத்தட்ட 50 முதல் 75 கல்லூரிகள் வரை மட்டுமே முழுமையான இடங்கள் பூர்த்தியாகி உள்ளன. இதற்கு காரணம் அண்ணா பல்கலைக்கழகம் கூறும் போது இந்த கல்லூரிகளுக்கிடையே உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், அதேபோன்று வேலைவாய்ப்பு எந்த அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று அதன் உள்ளிட்ட அம்சங்களை பார்த்துதான் மாணவர்கள் கல்லூரிகளில் சேருகின்றனர்.

மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரிகள் மூடிவிடலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே அதை பிரதிபலிக்கும் விதமாக மாணவர் சேர்க்கை விபரங்களை எடுத்து காட்டுகின்றனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகள் கூட மாணவர் சேர்க்கை முழுமையாக நிரம்பவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக துணை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இதற்கு 10,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்றாலும் கூட ஏறக்குறைய 4,000 க்கும் உள்ள இடங்கள் மட்டுமே நிரம்ப வாய்ப்புகள் இருக்கின்றது. இறுதியாக 50,000 இடங்கள் காலியாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

The post பொறியியல் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் 50,000 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,B.E. ,B.Tech ,Dinakaran ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை