×

ஈராக்கின் கிர்குக் நகரில் 2 இனக்குழுக்கள் பயங்கர மோதல் :போலீசார் துப்பாக்கிச் சூடு; 3 பேர் மரணம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!

பாக்தாத் : ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள கிர்குக் நகரில் 2 இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்துள்ளது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கின் எண்ணெய் நகரமான கிர்குக் நகரில் தற்போது எங்கு பார்த்தாலும் தோட்டாக்கள் வெடிக்கும் சத்தமும் வாகனங்கள் தீக்கரையாகும் சத்தம் மட்டுமே கேட்கின்றன. 2 இனக்குழுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று அது வன்முறையாக வெடித்தது. இதனால் ஏராளமான வாகனங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன. வன்முறையாளர்களை நோக்கி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கிர்குக் நகரில் இந்த மோதலுக்கு அங்குள்ள ஒரு கட்டிடமே காரணமாக மாறியுள்ளது. இந்த கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு குர்த்திஸ்தான் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த கட்டிடத்தை ராணுவம் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறது. இதனை நல்லெண்ண அடிப்படையில் அந்த கட்சியிடமே வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு அங்குள்ள அரபு மற்றும் துருக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்த நிலையில் பதற்றத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ஈராக்கின் கிர்குக் நகரில் 2 இனக்குழுக்கள் பயங்கர மோதல் :போலீசார் துப்பாக்கிச் சூடு; 3 பேர் மரணம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kirkuk, Iraq ,Baghdad ,Kirkuk ,Iraq ,
× RELATED ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆட்டோவில்...