×

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் வாங்குவதற்கு ரூ.9000 கோடி தேவை : தேர்தல் ஆணையம்!!

டெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் வாங்குவதற்கு மட்டும் ரூ.9000 கோடிக்கு மேல் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மற்றும் அதற்கு ஆகும் செலவு குறித்து 2015ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை வாங்க ரூ.9,309 கோடி செலவாகும் என்றும் இந்த இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வாங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க இட வசதி மற்றும் பாதுகாவர்கள் உள்ளிட்ட கூடுதல் சுமை ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களை தனித்தனியாக நடத்தினால் தேர்தல் பணிக்கான ஊழியர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் இரு தேர்தல்களையும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தும் பட்சத்தில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தினால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் வாங்குவதற்கு ரூ.9000 கோடி தேவை : தேர்தல் ஆணையம்!! appeared first on Dinakaran.

Tags : VVPAT ,Delhi ,Dinakaran ,
× RELATED விவிபேட் தொடர்பான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி