×

பழங்கனாங்குடி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவெறும்பூர், செப்.4: திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே துளசி மகாநாடு என அழைக்கப்படும் பழங்கனாங்குடி, துவாக்குடி, ஆசூர், பொய்கைகுடி, எலந்தப்பட்டி, காந்தலூர், நடராஜபுரம் ஆகிய 7 கிராமங்கள் உள்ளடக்கியதாகும். இந்த ஏழு கிராமங்களுக்கு பொதுவாக பழங்கனாங்குடியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. முத்து மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு கோயிலில் உள்ள கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக கடந்த 1ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நேற்று காலை 10.45 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் மூல கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், பழங்கனாங்குடி மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் இருந்தும், துளசி மகாநாட்டை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

The post பழங்கனாங்குடி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Palanganangudi Muthu ,Mariamman ,Temple ,Kumbabhishekam ,Tiruverumpur ,Kumbhabhishekah ,Palanganangudi Muthu Mariamman temple ,Tiruverumpur… ,
× RELATED மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா