
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- யூனியன் அரசு
- Beravoorani
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு
- சேதுபவாசத்திரம்
- பேராவூரணி
- யூனியன்
- பெரியண்ணன்
- M.Com.
- தின மலர்
பேராவூரணி, செப். 4: பேராவூரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய செயலாளர் (பொ)வேலுசாமிஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாஜ அரசின் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், வரும் 7ம் தேதி நாடு தழுவிய பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கிராமங்கள்தோறும், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்வது, வரும் 7ம் தேதி பேராவூரணியில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஒன்றிய அரசை கண்டித்து மா.கம்யூ., பிரசார இயக்கம் appeared first on Dinakaran.