×

வல்லம் அருகே ஆலக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது

வல்லம், செப். 4: தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் மற்றும் பரிவார சந்நிதிகள் (கருப்புசாமி, மதுரைவீரன், வீரபத்திரன்), மகா கணபதி, சுப்பிரமணிய சுவாமி (பாலதண்டாயுதபாணி), மகா காளியம்மன் ஆகிய சுவாமி கோயில்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட ஆலய திருப்பணிகள் நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று காலை, இக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஆலக்குடி ஊராட்சி தலைவர் சாந்தி சாமி, ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் குழந்தை அம்மாள் ரவிச்சந்திரன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

The post வல்லம் அருகே ஆலக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Muthumariamman Temple Kumbabhishekam ,Alakkudi ,Vallam ,Muthumariyamman ,Parivar ,Karuppusamy ,Maduraiveeran ,Veerapatharan ,Alakkudi, Thanjavur district ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்