×

பொன்னமராவதி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

பொன்னமராவதி, செப். 4: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டியில் செல்வ விநாயகர் மற்றும் சண்முகநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதைமுன்னி்ட்டு கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 2ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 10.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் க.புதுப்பட்டி,கண்டியாநத்தம், கேசராபட்டி, தூத்தூர், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்.புதுப்பட்டியில் வாழும்க.புதுப்பட்டி அருவியூர் வடக்கு வளவு நகரத்தார்கள் செய்திருந்தனர்.

இதில் சோமசுந்தரம், லெட்சுமணன், கதிர்வேல், மாணிக்கம், கதிரேசன், திருநாவுக்கரசு, கம்பராசன், தனபால், சண்முகநாதன், விஸ்வநாதர், அரசுராமநாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, ஆரணிப்பட்டியில் பெரியகருப்பையா சுவாமி கோயில் வீடு மற்றும் பொங்கல் தளத்தில் உள்ள பெரியகருப்பையா, செல்லிகருத்தான், கோட்டைக் கருப்பர், மருதாயி சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kumbabishek ,Vinayagar temple ,Ponnamaravati ,Selva ,Vinayagar ,Shanmuganathar Temple ,Kumbabhishek ,Kandiyanatam Pudhupatti ,Ponnamaravati.… ,Kumbabhishekah ,Ponnamaravathy ,
× RELATED புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில்...