×

இலுப்பூரில் இருந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயிலுக்கு பாதயாத்திரை

விராலிமலை, செப்.4: புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தல ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது வழக்கம்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு செல்வதற்கான வழியனுப்பும் விழா அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.இதில் சிறப்பு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை செய்து, அவர்களை வழி அனுப்பி வைத்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

The post இலுப்பூரில் இருந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயிலுக்கு பாதயாத்திரை appeared first on Dinakaran.

Tags : Velangkanni Arogya Mata Temple ,Ilupur ,Viralimalai ,Velankanni ,Phunta Arogya Mata ,Temple ,Velankanni Puntha Arogya Mata Temple ,
× RELATED அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில்...