×

சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் தகவல்: துத்தநாக சத்து பற்றாக்குறையால் நெற்பயிரில் மகசூல் இழப்பு வேளாண் அதிகாரி அறிவுரை

கீழ்வேளூர், செப்.4: நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும், ரசாயன உரங்களில் பேரூட்ட சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நுண்ணூட்ட சத்துக்களை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தினை (ஜிங்க் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெற்பயிர் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒரே நிலத்தில் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாக சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தால், துத்தநாக சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும். பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மெக்னீசியம் சத்து மற்றும் இரும்புச் சத்து இடுவதால் அவை துத்தநாக சத்தின் செயல் திறனை குறைக்கிறது.

The post சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் தகவல்: துத்தநாக சத்து பற்றாக்குறையால் நெற்பயிரில் மகசூல் இழப்பு வேளாண் அதிகாரி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Sendak ,Kilivelur ,Rajalakshmi ,Nagai District ,
× RELATED வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு...