×

திருநள்ளாறில் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் துவக்கம்

காரைக்கால், செப்.4: திருநள்ளாறு கொம்யூனுக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது. பருவமழைக்கு முன் வடிகால்கள் முறையாக தூர்வாரவும், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கழிவுநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கு அறிவுறுதினார். இதனடிப்படையில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், ஒரு குழு அமைக்கப்பட்டு, கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அருணாசலம் இப்பணியை தொடங்கி வைத்தார். பருவ மழைக் காலத்துக்கு முன் இப்பணிகள் செய்து முடிக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

பல்மருத்துவ படிப்பு காலியிடம்; முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் முதுநிலை பல் மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் வருமாறு: மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி – 6, மாகே பல் மருத்துவ கல்லூரி – 6, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரி – 4 என அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 16 இடங்களும், மாகே பல் மருத்துவ கல்லூரி – 7, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரி – 7 என நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 14 இடங்கள் காலியாக உள்ளன.

The post திருநள்ளாறில் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirunallar ,Karaikal ,Tirunallaru Commune ,Thirunallar ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...