×

வழுதூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

ராமநாதபுரம், செப். 4: கடலாடி அருகே மங்கலம் செல்லியம்மன், ராமநாதபுரம் அருகே வழுதூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலாடி அருகே உள்ள மங்களம் கிராமத்தில் செல்லியம்மன் விநாயகர் மற்றும் பரிவார கிராமதேவதைகளுக்கும், ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் அங்காளபரமேஸ்வரி மற்றும் இருளப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக வெள்ளிக் கிழமை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் துவங்கியது.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹூதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. நேற்று வரை 3 நாட்கள் முதல் காலம் முதல் ஆறு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு நேற்று காலையில் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபராதனைகளும் நடந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதனை போன்று மங்கலம் கிராமத்திலுள்ள ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் சோமேஸ்வரர் கோயில் மண்டல பூஜை யாகசாலை பூஜைகள் நடந்தது. யாக சாலையிலிருந்து புனிதநீர் எடுத்து மூலவர், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் நந்தியம்பெருமானாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, தீபராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post வழுதூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Valhudur Amman Temple ,Ramanathapuram ,Mangalam ,Chelliyamman ,Cuddaly ,Valhudur Angalaparameswari temple ,Ramanathapuram.… ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...