×

பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சிவகங்கை, செப்.4: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை மாவட்டத்தில் மல்லல் ஆதிதிராவிடர் நலத்தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் 1, உஞ்சனை ஆதிதிராவிடர் நலத்தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2, மற்றும் அதிகரம் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் 2(ஆங்கிலம்-1, அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 வழங்கப்படும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இந்த தற்காலிக பணி நியமனம் காலிப்பணியிட பணிக்கு தேர்வு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல், 2024 வரை மட்டுமே ஆகும். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய கல்வி சான்றுகளுடன் இன்று மாலை 5.45மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Asha Ajith ,Mallal Adi Dravidar Welfare School ,Dinakaran ,
× RELATED மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி