×

ஒன்றிய அரசை கண்டித்து கம்யூ. பிரசார கூட்டம்

 

திருவில்லிபுத்தூர், செப். 4: ஒன்றிய அரசை கண்டித்து திருவில்லிபுத்தூரில் பேருந்து நிலையத்தில் வருகிற 7ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மறியல் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளக்க பிரசார கூட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம் திருவில்லிபுத்தூர் சக்கரை குள தெருவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட செயற்குழுவை சேர்ந்த சுந்தரபாண்டியன், நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார், வத்ராப் ஒன்றிய செயலாளர் பெனரி, மாவட்ட குழுவை சேர்ந்த திருமலை, ஜோதிலட்சுமி, ஜெயக்குமார், அனைத்திந்திய மாதர் சங்கத்தைச் சார்ந்த ரேணுகாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கம்யூ. பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communism ,union government ,Thiruvilliputhur ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்