×

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

 

திருவில்லிபுத்தூர், செப். 4: திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது கே.தொட்டியபட்டி. இந்த ஊரில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான மில்லின் பின்பகுதியில் சுமார் 100 சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மூன்று பேர் தோட்டத்தில் இருந்து மூன்று சந்தன மரங்களை வெட்டி எடுத்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.75,000 என தெரிகிறது. இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டிச் சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,K. Tottiyapatti ,Murugavel ,Dinakaran ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு