×

கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்: தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை ஒடுகத்தூர் அடுத்த தொங்குமலையில்

ஒடுகத்தூர், செப்.4: ஒடுகத்தூர் அடுத்த தொங்குமலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஆற்றின் நடுவே இருந்த தரைப்பாலம் மூழ்கியது. இதனால், தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பலாம்பட்டு- தொங்குமலை ஆகிய மலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராமங்களுக்கு இடையே காட்டாறு செல்கிறது. இதனால், மலைவாழ் மக்களின் நலனுக்காக ஆற்றை கடக்கும் வகையில் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், தற்போது தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி தண்ணீர் பாலத்திற்கு மேலே செல்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக பைக்குகள் செல்ல முடியாமல் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கி செல்கின்றது.

அதேபோல், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பொதுமக்கள் தரைப்பாலத்தை பெரும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். தற்போது, பருவமழை காலம் என்பதால் தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரித்து இருபுறமும் தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்: தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை ஒடுகத்தூர் அடுத்த தொங்குமலையில் appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Hangumalai ,Odugathur ,Thangumalai ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் இறந்து கிடந்த...