×

சிஎஸ்ஐ லெக்லர் ஆலய மறுபிரதிஷ்டை தினவிழா

சேலம், செப்.4: சேலம் கோட்டை சிஎஸ்ஐ லெக்லர் ஆலய மறுபிரதிஷ்டை தினவிழா, லெக்லர் குடும்ப விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆராதனைக்கு ஆலய ஆயர் எழில்ராபர்ட் கெவின் தலைமை வகித்தார். தேவனை மகிமைப்படுத்தும் விதமாக சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக ஏற்காடு பாபு காருண்யகிரி பங்கேற்று, தேவசெய்தி வழங்கினார். பின்னர், 70 வயது கடந்த சபையின் மூத்த உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
ஆலய கமிட்டி செயலாளர் இம்மானுவேல் சார்லஸ், பொருளாளர் தேவகுமார், ஈரோடு-சேலம் திருமண்டல பொருளாளர் நெல்சன் கொர்னேலியஸ், உதவி சொத்து பராமரிப்பு குழு மேலாளர் ஞானதாஸ், கமிட்டி உறுப்பினர்கள், திருமண்டல உறுப்பினர்கள், பெண்கள் ஐக்கிய சங்கத்தினர், சபை மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

The post சிஎஸ்ஐ லெக்லர் ஆலய மறுபிரதிஷ்டை தினவிழா appeared first on Dinakaran.

Tags : CSI Legler Temple Rededication Day ,Salem ,Rededication Day ,Salem Fort ,CSI ,Lechler Temple ,Lechler Family Festival ,Dinakaran ,
× RELATED சேலம் மேச்சேரியில் யானைகள்...