×

திமுக எம்பி பார்த்திபன் இன்று மக்கள் குறைகேட்பு

சேலம், செப்.4: சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், மக்களிடம் குறை கேட்பு முகாம்களை நடத்தி வருகிறார். இந்தவகையில் சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (4ம் தேதி) வார்டு வாரியாக முகாம்களை நடத்தி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை எம்பி பார்த்திபன் பெறுகிறார். இதன்படி, இன்று காலை 9 மணிக்கு மாநகராட்சியின் 10, 11வது வார்டுக்கு செங்கல்அணை ரோடு தேசிய புனரமைப்பு காலனியிலும், 9வது வார்டுக்கு காலை 9.30 மணிக்கு அல்லிகுட்டை மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும், 36, 37வது வார்டுக்கு காலை 10 மணிக்கு சத்யாநகர் எஸ்.கே.டவுன்சிப்பிலும், 34, 35, 38வது வார்டுகளுக்கு காலை 10.30 மணிக்கு நஞ்சம்பட்டி காலனி மாரியம்மன்கோயில் அருகிலும், 39, 40வது வார்டுக்கு காலை 11 மணிக்கு வித்யாநகர் வித்யா மந்திர் பள்ளி பின்புறமும், 41வது வார்டுக்கு காலை 11.30 மணிக்கு பட்டைகோயில் பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறமும், 42, 43வது வார்டுக்கு மதியம் 12 மணிக்கு கிச்சிப்பாளையம் வ.உ.சி.,சிலை அருகிலும், 44வது வார்டுக்கு கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காட்டிலும் குறைகேட்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் போன்ற மனுக்களை எம்பி பெறுகிறார். இதுதொடர்பாக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கையில்,‘முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலில் தொகுதி முழுவதும் கிராமங்கள், வார்டு வாரியாக மக்களிடம் குறை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அம்மாபேட்டை மண்டலத்தில் இன்று மக்களிடம் குறை கேட்கிறேன். இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மண்டலக்குழு தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். அதனால் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க கேட்டுக்கொள்கிறேன்,’’ எனக்கூறியுள்ளார்.

The post திமுக எம்பி பார்த்திபன் இன்று மக்கள் குறைகேட்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Parthiban ,Salem ,SR Parthiban ,
× RELATED புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது