×

விவசாயிகள் போராட்டம்

மோகனூர், செப்.4: நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரத்தில் உள்ள வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை வளையப்பட்டியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, கொமதேக ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

The post விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal District ,Mohanur District ,Parali ,N. Budhupatti ,Chipkot ,Arur ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்