×

பாஜ தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்தும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பம் பகுதியில் அதிமுக பிரமுகர் காதணி விழா நிகழ்வில் பங்கேற்றமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 1967ம் ஆண்டுக்குப் பிறகுதான்நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்திய முறை மாறியது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது வரவேற்கத்தக்க விஷயம் பார்க்கிறோம். இதனால் மக்களின் வரி பணம் வீணாவது தவிர்க்கப்படும். 1952ல் 11 கோடி ரூபாய் செலவில் தேர்தல் நடந்தது. தற்போது 60 ஆயிரம் கோடி செலவாகிறது. அந்தப் பணத்தை பாலம் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். மத்தியில் நாங்கள் பாஜவுடன் கூட்டணியில் இருக்கிறோம் தமிழகத்தில் எங்கள் தலைமையில் பாஜ கூட்டணி உள்ளது. அண்ணாமலைக்கு கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post பாஜ தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Tamil Nadu ,Former minister ,Jayakumar ,Chennai ,
× RELATED தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது...