×

கொள்ளிடத்தில் அமைக்கப்பட உள்ள 10 மணல் குவாரி திட்டத்தை அரசு கைவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கொள்ளிடத்தில் அமைக்கப்பட உள்ள 10 புதிய மணல் குவாரிகள் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் கொள்ளிடம் ஆற்றில் மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த மணல் குவாரிகள் திறக்கப் பட்டால், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும். 87 கி.மீ தொலைவுக்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அதைவிடக் கொடூரமாக கொள்ளிடம் ஆற்றை சீரழிக்க முடியாது.

கொள்ளிடம் ஆறு 87 கி.மீ தொலைவுக்கு இடைவெளி இல்லாமல் மணல் சூறையாடப்பட்டிருக்கும். இதனால், கொள்ளிடக் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைதல், கடல் நீர் உள்ளே நுழைதல் என பாதிப்புகள் ஏற்படும். கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு 10 கிமீக்கு 2 மணல் குவாரிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை சீரழித்து வருகிறது. எனவே, கொள்ளிடத்தில் குவாரிகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

The post கொள்ளிடத்தில் அமைக்கப்பட உள்ள 10 மணல் குவாரி திட்டத்தை அரசு கைவிட அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Kollid ,CHENNAI ,PMA ,Kolli ,Dinakaran ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...