
புதுடெல்லி: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முதல் 6ம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அண்மையில் ஆய்வு செய்தது.
இதன் தொடர்ச்சியாக மத்தியபிரசேத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதல் நாளை மறுதினம்(செப்.6) வரை தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு செல்ல உள்ளனர். அங்கு மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
The post சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள்: ம.பியில் இன்று முதல் தேர்தல் ஆணையம் ஆய்வு appeared first on Dinakaran.