×

துணை கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் இன்ஜி. கல்லூரிகளில் 89,446 பேர் சேர்ந்தனர்: மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு முடிவில் 89 ஆயிரத்து 446 பேர் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறப்பு பிரிவு மாணவர்கள் 775 பேர், பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், மூன்றாவது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்ஜினியரிங் கலந்தாய்வின் 3 சுற்று முடிவில், பொது பிரிவில் 80 ஆயிரத்து 951 மாணவர்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 11 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் இன்ஜினியரிங் படிப்பில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் உள்ளன. ஆனால், 90 ஆயிரத்து 201 இடங்கள் மட்டுமே இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிரம்பி உள்ளது. இதன் தொடர்ச்சியாக துணை கலந்தாய்வு வருகிற 6ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கவுன்சலிங்கில் இதே காலகட்டத்தில் 87 ஆயிரத்து 446 இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post துணை கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் இன்ஜி. கல்லூரிகளில் 89,446 பேர் சேர்ந்தனர்: மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...