×

கார் மீது லாரி மோதல் 3 பேர் பரிதாப சாவு

செங்கம்: திருப்பத்தூர் மாவட்டம், காக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மகன் யோகேஷ்(25). இவர் திருச்சியில் உள்ள உறவினர்களை பார்க்க நண்பர்கள் ஆகாஷ்(20), கவுதம மணிகண்டன்(28) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் புதுச்சேரி-பெங்களூரு புறவழிச்சாலை வழியாக நள்ளிரவு 12 மணியளவில் சென்றபோது லேசான மழை பெய்துள்ளது.

அப்போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு சென்ற லாரி மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் யோகேஷ் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post கார் மீது லாரி மோதல் 3 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Ravi ,Yogesh ,Kakampalayam, Tirupathur district ,Akash ,Trichy ,
× RELATED உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு பணிந்தார்...