×

சென்டர் மீடியனில் கார் மோதியதில் இசையமைப்பாளர் உள்பட 2 பேர் பலி

அவிநாசி: சென்னை சாலி கிராமம் அபுசாலி வீதி சேர்ந்தவர் தசி என்கிற சிவக்குமார் (50). திரைப்படம், டிவி சீரியல்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவரும் சென்னையை சேர்ந்த தமிழ்அடியான் (50), சென்னை கோயம்பேடு அன்னம்மாள் நகரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் மூவேந்திரன் (54), சென்னை ஆவடி புதுப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் (44) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் கேரளாவிற்கு இடம் வாங்குவது தொடர்பாக சென்றனர்.

நேற்று கேரளாவில் இருந்து மீண்டும் காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தனர். நேற்று மதியம் 12 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை, வேலூர் பிரிவில் வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த தமிழ்அடியான், தசி என்கிற சிவக்குமார் ஆகிய இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

The post சென்டர் மீடியனில் கார் மோதியதில் இசையமைப்பாளர் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Dasi ,Sivakumar ,Abusali road, Sally village, Chennai ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி