×

விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா? அன்னிபெசன்ட்டா? தைரியம் இருந்தா போட்டோ போடு… : சீமான் ஆவேசம்

கோவை: விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா? அன்னிபெசன்ட்டா? தைரியம் இருந்தா ஒரு போட்டோ போடச்சொல்லுங்க என்று சீமான் ஆவேசமாக கூறி உள்ளார். கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: அண்ணாமலை என்னைவிட ஒரு விழுக்காடு அதிக வாக்குகள் வாங்கட்டும் என்று நான் சொன்னதையும், அதற்கு அண்ணாமலை சீமானைவிட ஒரு விழுக்காடு அல்ல 30 விழுக்காடு அதிகம் ஓட்டு வாங்கி காட்டுகிறேன் என கூறியிருப்பதையும் பற்றி கேட்கிறீர்கள்.

அந்த கருத்தை நான் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். என்னைவிட 30 விழுக்காடு வாக்குகள் அதிகம் அவர் வாங்கப்போகிறேன் என்கிறார். நான் 7 விழுக்காடு வைத்திருக்கிறேன். அப்படின்னா 37 விழுக்காட்டை அண்ணாமலை தொட்டு விடுவார் என்று சொன்னால் அவர்களுக்கு அதிமுகவுடன் கூட்டணியே தேவையில்லையே?. தனித்து நின்று ஆட்சியை பிடித்து விடலாமே. அது அவர் தன்னோடு பயணிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பேசியதுதான்.
திமுக, அதிமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை. நான் அங்கு இருந்து உள்ளேன். திமுக, அதிமுகவுடன் நான் மோதுவது எங்களுக்குள் நடக்கும் ஒரு அண்ணன், தம்பி சண்டை என வைத்துக்ெகாள்ளலாம். இதைத்தான் எங்கள் தலைவரும் கூறினார். இதில், தலையிட பாஜ யார்?. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும். அப்போது அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. திமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

எனக்கு திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது கனவு இல்லை. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் கனவு. என் தகுதியை தீர்மானிப்பது யார்? அவர் (விஜயலட்சுமி) என்ன அன்னி பெசன்ட் அம்மையாரா?, அன்னை தெரசாவா?, ஆங் சான் சூகியா?, மணிப்பூர் மக்களுக்காக போராடின ஐரோம் சர்மிளாவா? என்னிடம் கேள்விதான் கேட்க வேண்டும். கேவலத்தை கிளறக்கூடாது. என்னை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டது என்று சொல்கிறார். அவரிடம் அது பற்றிய ஒரு போட்ேடா அல்லது ஒரு சான்று ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா? எத்தனை பேரோ என்னுடன் போட்டோ எடுத்து போடுகிறார்கள். நீ ஒரு போட்டோ போடு. வாய்க்கு வந்ததை பேசுவதா?

னக்கு முன்பு எத்தனை பேருடன் திருமணம்? உங்களுக்கு ஒரு வன்மம் இருக்கிறது. நான் என்ன வேலை செய்வது? மக்களுக்காக போராடவா? விஜயலட்சுமியை எதிர்த்து போராடவா? ஒரு குற்றச்சாட்டை நியாயமா ஆதாரத்தோடு வைக்கவேண்டும். ஒரு சான்று காட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா? அன்னிபெசன்ட்டா? தைரியம் இருந்தா போட்டோ போடு… : சீமான் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Teresa ,Seaman ,Coimbatore ,Mother Teresa ,Seeman ,Seaman Awesam ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!