×

எதிர்க்கட்சிகள் கூட்டாக நின்றால் பாஜவை எளிதில் தோற்கடிக்கலாம்: ஆம் ஆத்மி உறுதி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கூட்டாக நின்றால் பாஜவை எளிதில் தோற்கடிக்கலாம் என ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்தார். ஜனநாயகத்துக்கான இந்திய பள்ளி சார்பில் நேற்று நடந்த விவாதத்தில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் பங்கேற்று பேசுகையில்,‘‘ எதிர்க்கட்சி இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல தியாகங்களை செய்ய வேண்டும்.இந்தியா கூட்டணி ஒன்றாக இருப்பதில் சிக்கல்கள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டாக நின்றால் அடுத்த தேர்தலில் மோடி வெற்றி பெற முடியாது. தேஜ கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இந்தியா கூட்டணியில் விரைவில் சேரும்’’ என்றார்.

பாஜவை சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில் பேசுகையில்,‘‘ பிரதமர் மோடி எதிர்ப்பு என்ற கொள்கையினால் எதிர்கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணி நிலைக்காது’’ என்றார். ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘‘ பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அடிப்படை விஷயங்களில் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விதியின்படி தேர்தல் நடத்தப்பட்டால் நாளை சட்ட பேரவைகள் எதுவும் கலைக்கப்படாது என கூறமுடியுமா? ஒருவேளை தொங்கு பேரவைகள் அமைந்தால் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படாது என்று உறுதியாக சொல்ல முடியுமா’’ என்றார்.

The post எதிர்க்கட்சிகள் கூட்டாக நின்றால் பாஜவை எளிதில் தோற்கடிக்கலாம்: ஆம் ஆத்மி உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Aam Aadmi Party ,New Delhi ,Saurabh Bhardwaj ,
× RELATED 3 மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில்...