- ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
- ஜம்மு
- சங்பூர்
- ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை
- ஜம்முவின் ரஜோரி மாவட்டம் மற்றும்
- காஷ்மீர்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்பூர் கிராமத்தில் ராணுவ வீரர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலை யோரத்தில் டிபன் பாக்ஸ் ஒன்று கிடந்தது.
அதில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ராணுவ வீரர்கள் உடனடியாக நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, டிபன்பாக்ஸ் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. டிபன்பாக்ஸ் குண்டை வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு appeared first on Dinakaran.