×

கடலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் நிவாரண உதவியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உயிரிழந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் நேற்று (2-9-2023) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், த/பெ. மகேந்திரன் (வயது 25) என்பவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்

உயிரிழந்த சக்திவேலின் பெற்றோருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post கடலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் நிவாரண உதவியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Cuddalore ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Sakthivel ,Cuddalore district ,
× RELATED சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:...