×

ராமேஸ்வரத்தில் திமுக எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்; திமுகவை நான் ஆதரிக்கிறேன்: சீமான் பேட்டி

கோவை: ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்; திமுக எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்; திமுகவை நான் ஆதரிக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு அரசியல் கருத்துக்களை முன் வைத்து பேசினார். 2024 தேர்தல் குறித்தும், திமுக குறித்தும் தனது கருத்தை முன்வைத்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார் என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் திமுக பிரதமரை எதிர்த்து தங்கள் வேட்பாளரை நிறுத்தினால், நாம் தமிழர் கட்சி ராமநாதபுரத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என அதிரடியாய் தெரிவித்தார்.

மேலும், கடந்த முறை 2019 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சிகள் தான் போட்டியிட்டன. அதனால் இந்த முறையும் பாஜகவுக்கு எதிராக திமுக வேட்பாளரை நிறுத்தாது என்பது போல தனது கருத்தை முன்வைத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

The post ராமேஸ்வரத்தில் திமுக எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்; திமுகவை நான் ஆதரிக்கிறேன்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dizhagam ,Rameswaram ,Timuga ,Seeman ,Govai ,Narendra Modi ,Dizzagam ,Divagu ,
× RELATED ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் பாதை தண்டவாளத்தில் விரிசல்!