×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஸ்வெரேவ், ஓன்ஸ் ஜபீர் வெற்றி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று 3வது சுற்று போட்டிகள் நடந்தன. 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிளாரா புரலை வென்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 5-7, 6-2, 6-2 என ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவை வென்றார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 4-6, 6-2 என உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸ், 6-4, 6-3 என இங்கிலாந்தின் கேட்டி போல்டரையும், சீனாவின் கின்வென் ஜெங், 6-3, 4-6, 6-4 என இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியையும், துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 5-7, 7-6, 6-3 என செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவையும் வீழ்த்தினர். செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-2, 6-1 என ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வென்றார்.

ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றில், இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 2-6, 6-4, 6-2 என சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவையும், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கையும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், சிலியின் நிக்கோலஸ் ஜாரியையும், ஸ்பெயினின் அல்காரஸ் இங்கிலாந்தின் டான் எவன்சையும் வீழ்த்தினர். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 5-7, 7-6, 6-1, 6-1 என பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஸ்வெரேவ், ஓன்ஸ் ஜபீர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Zverev ,Ones Zabir ,US Open Tennis ,New York ,US Open ,Grand Slam ,Jabir ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்...